Is India a dash for current champion Australia?

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன், இந்தியா இன்று மோதுகின்றது.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி இதுவரை 2 ஆட்டங்களில், ஒரு வெற்றியையும், ஒரு டிராவையும் பெற்றுள்ளது.

இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது.

ஆனால், ஆஸ்திரேலிய அணியோ, தனது முந்தைய ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணி என்றாலும், இந்திய அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஆதலால், ரசிகர்களாகிய நமக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.