ipl warning mavi and avesh khan
கொல்கத்தா மற்றும் டெல்லி அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரையும் ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன் தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால், 219 ரன்கள் குவித்த டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. அப்போது, டெல்லி வீரர் கோலின் முன்ரோவின் விக்கெட்டை வீழ்த்திய ஷிவம் மாவி, அவரை பார்த்து வெளியே போ என்று சைகையில் செண்ட் ஆஃப் செய்தார்.

அதேபோல, கொல்கத்தா அணியின் பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் வீரர் ஆண்ட்ரூ ரசலின் விக்கெட்டை வீழ்த்திய ஆவேஷ் கான், அவருக்கு பிளைன் கிஸ் கொடுத்து வெளியே போ என்று சைகை செய்து செண்ட் ஆஃப் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த ரசல், ஏதே கேட்க பிறகு அவரிடம் சென்று ஆவேஷ் கான் மன்னிப்பு கேட்டார்.

ஐபிஎல் விதிகளை மீறி, ஷிவம் மாவியும் ஆவேஷ் கானும் களத்தில் நடந்துகொண்டதால், அவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளில் லெவல்-1 தவறை செய்ததால் அவர்களுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தவறு தொடரும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
