ஐபிஎல் போட்டியின் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியின் 3-வது ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடைப்பெற்றது.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச தீர்மானிக்க, முதலில் பேட் செய்த பெங்களூரில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 44 ஓட்டங்கள் எடுத்தார். 

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வினய் குமார், நிதீஷ் ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் பேட் செய்த கொல்கத்தாவில் அதிகபட்சமாக சுனில் நரைன் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 50 ஓட்டங்கள் எடுத்தார். 

கேப்டன் தினேஷ் கார்த்திக் 35 ஓட்டங்கள், வினய் குமார் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். 

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.