ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்கின்றன.

இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அமைப்பும் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ஐபிஎல் கீதம் என்றொரு பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/iLZMLM8RRgw" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

இந்தப் பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடங்க இன்னும் சில நாள்கள் இருந்தாலும் அருமையான முறையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே ஐபிஎல் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.