IPL 2025 SRH vs RR : ஐபிஎல் 2025 தொடரின் 2ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது. மேலும் ஒரு ரன்னில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 287 ரன்கள் தனது சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.
அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் இணைந்த இஷான் கிஷன் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் அடித்த முதல் சதம் இதுவாகும். அவர் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் எடுத்தார்.
ஹென்ரிச் கிளாசென் 34 ரன்கள் எடுத்தார்.
நிதிஷ் ரெட்டி 30 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக் சர்மா 24 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில்
துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றனார். 3/44 (4 ஓவர்கள்)
மகீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார் 2/52 (4 ஓவர்க்ள்)
சந்தீப் சர்மா ஒரு விக்கெட் எடுத்தார் 1/51 (4 ஓவர்கள்)
அதிக ரன்கள் குவித்த ஜோஃப்ரா ஆர்ச்சர் – 76 ரன்கள் (4 ஓவர்கள்)
![]()