MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதராபாத் 286 ரன்கள் குவிப்பு; RRக்கு ஆட்டம் காட்டிய இஷான் கிஷன்!

ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதராபாத் 286 ரன்கள் குவிப்பு; RRக்கு ஆட்டம் காட்டிய இஷான் கிஷன்!

SRH vs RR IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரின் 2ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்துள்ளது

3 Min read
Rsiva kumar
Published : Mar 23 2025, 06:22 PM IST| Updated : Mar 23 2025, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஐபிஎல் தொடரில் நடந்த பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்கள் எடுத்தது. 31 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 67 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் எடுத்த வீரர். 

27
Cricket, T20, Asianet News Tamil, SRH vs RR, IPL 2025

Cricket, T20, Asianet News Tamil, SRH vs RR, IPL 2025

வழக்கம் போல் பவர் பிளேவை முழுமையாக பயன்படுத்தும் சன்ரைசர்ஸ் அணியை இன்றைய போட்டியிலும் காண முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். 3 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 45 ரன்களை எட்டியது. பின்னர் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தாலும், மூன்றாவது வீரராக வந்த இஷான் கிஷனுடன் இணைந்து ஹெட் ஸ்கோரை உயர்த்தினார். ஹெட்டுடன் கிஷனும் அதிரடியாக விளையாடியதால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 7வது ஓவரில் அணியின் ஸ்கோர் 100ஐ கடந்தது. 

37
Ishan Kishan, IPL 2025, Indian Premier League

Ishan Kishan, IPL 2025, Indian Premier League

அதிரடியாக விளையாடிய ஹெட் 10வது ஓவரில் ராஜஸ்தான் வீரர் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிட் ஆஃபிற்கு மேலே ஒரு ஷாட் அடிக்க முயன்ற ஹெட் தவறிழைத்தார். பந்து நேராக ஷிம்ரோன் ஹெட்மேயரின் கைகளில் விழுந்தது. பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டியும், இஷான் கிஷனும் ஸ்கோர் போர்டின் வேகத்தை குறைக்காமல் விளையாடியதால் ராஜஸ்தான் அணி வியர்த்தது. 12வது ஓவரின் 2வது பந்தில் அணியின் ஸ்கோர் 150ஐ எட்டியது. 13வது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்து இஷான் கிஷன் அரை சதம் அடித்தார். 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட கிஷன் அரை சதம் அடித்தார். 

47
IPL 2025, SRH vs RR

IPL 2025, SRH vs RR

சன்ரைசர்ஸ் அணியின் இன்னிங்ஸ் பொறுப்பை முழுமையாக கிஷன் ஏற்றதால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 14.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 200ஐ எட்டியது. பின்னர் 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் சன்ரைசர்ஸ் அணி சாதனை ஸ்கோரை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிக ரன்கள் கொடுத்தார். 4 ஓவர்கள் முடிவில் ஆர்ச்சர் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார். கிளாசன் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 

57
Sunrisers Hyderabad vs Rajasthan Royals IPL 2025

Sunrisers Hyderabad vs Rajasthan Royals IPL 2025

19வது ஓவரில் இஷான் கிஷன் சதம் அடித்தார். 45 பந்துகளில் கிஷன் சதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணி 300 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததால் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் என முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரான ஹைதராபாத் அணியின் 287 ரன்கள் என்ற ஸ்கோரை கம்மின்ஸ் தலைமையிலான அணி திருத்த முடியவில்லை. 47 பந்துகளை எதிர்கொண்ட கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட கிஷன் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

67
Sunrisers Hyderabad vs Rajasthan Royals IPL Live Score 2025

Sunrisers Hyderabad vs Rajasthan Royals IPL Live Score 2025

இறுதியாக ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்தது. மேலும் ஒரு ரன்னில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 287 ரன்கள் தனது சாதனையை முறியடிக்க தவறிவிட்டது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணியில் இணைந்த இஷான் கிஷன் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் அடித்த முதல் சதம் இதுவாகும். அவர் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

77
IPL 2025 SRH vs RR

IPL 2025 SRH vs RR

டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் எடுத்தார்.

ஹென்ரிச் கிளாசென் 34 ரன்கள் எடுத்தார்.

நிதிஷ் ரெட்டி 30 ரன்கள் எடுத்தார்.

அபிஷேக் சர்மா 24 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில்

துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றனார். 3/44 (4 ஓவர்கள்)

மகீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார் 2/52 (4 ஓவர்க்ள்)

சந்தீப் சர்மா ஒரு விக்கெட் எடுத்தார் 1/51 (4 ஓவர்கள்)

அதிக ரன்கள் குவித்த ஜோஃப்ரா ஆர்ச்சர் – 76 ரன்கள் (4 ஓவர்கள்)

இஷான் கிஷன் அதிரடியால் 286 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இஷான் கிஷன்
SRH vs RR
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் 2025
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved