Asianet News TamilAsianet News Tamil

ipl 2022: RCB vs GT இன்று மோதல்: ஆர்சிபிக்கு விட்டுக்கொடுக்குமா குஜராத்? உத்தேச ப்ளேயிங் லெவன் வீரர்கள் யார்?

ipl 2022: RCB vs GT: மும்பையில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ipl 2022: RCB vs GT : RCB vs GT playing XI, match prediction, pitch report
Author
Mumbai, First Published May 19, 2022, 3:57 PM IST

மும்பையில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றுக்கான 4 இடங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20புள்ளிகளுடன் முதல்அணியாக உறுதி செய்துள்ளது. கொல்கத்தா அணியை வீழ்த்தியதையடுத்து, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் இடத்தை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள இரு இடங்களுக்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

ipl 2022: RCB vs GT : RCB vs GT playing XI, match prediction, pitch report

ஆர்சிபி அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 14 புள்ளிகளுடன் 5-வதுஇடத்தில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 

ஆர்பிசி அணி தான் ஆடிய கடைசி லீக் ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. குஜராத் டைடன்ஸ் அணி கடைசியாக சிஎஸ்கே அணியுடன் மோதி அந்த அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் இந்தஆட்டத்தில் ஆர்சிபிக்கு கட்டாய வெற்றி தேவை,இல்லாவிட்டால் தொடரிலிருந்து வெளியேறும். 

குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவி்ட்டது. ஆதலால் இந்த ஆட்டம் முறைக்காகவே இருக்கும். ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வருவதற்கு விட்டுக்கொடுக்குமா அல்லது வெளியேற்ற முயற்சிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை நிகர ரன்ரேட்டில் மைனஸில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றாலும் நிகர ரன்ரேட்டால் ப்ளே ஆஃப் சுற்று்க்குள் வருமா என்பதும் கடைசிநேரத்தில்தான் தெரியும். ஒருவேளை நல்லரேன் ரேட் கிடைக்க வேண்டுமென்றால், குஜராத் அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அது சாத்தியமா

மும்பை வான்ஹடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. சிறிய மைதானம் என்பதால், பவுண்டரி, சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் விளாசலாம். இரு அணிகளைப் பொறுத்தவரை டாஸ் வெல்லும் அணி  முதலில் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்யும். 

ipl 2022: RCB vs GT : RCB vs GT playing XI, match prediction, pitch report

ஆடுகளத்தில் சராசரியாக முதலில் பேட் செய்யும் அணி163 ரன்கள் விளாச முடியும். சேஸிங்கும் ஸ்வாரஸ்யமாகவே இருக்கும், பனிப்பொழிவு இல்லாததால், பந்துவீச்சும் ஓரளவு எடுக்கும். சேஸிங் செய்யும்வெற்றி பெற 60 சதவீதம் வாய்ப்புள்ளது என்பதால் ஆட்டம் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

ஆர்சிபி அணி உத்தேச லெவன்:

விராட் கோலி, டூ பிளசிஸ், ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மகிபால் லாம்ரோர், ஷான்பாஸ் அகமது, வனி்ந்து ஹசரங்கா, ஹர்ஸல் படேல், ஜோஸ் ஹசல்வுட், முகமது சிராஜ்

குஜராத் டைட்டன்ஸ்:

விருதிமான் சஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷித்கான், ரவி ஸ்ரீனிவாசன் சாய்கிஷோர், அல்சாரி ஜோஸப், யாஷ் தயல், முகமது ஷமி

Follow Us:
Download App:
  • android
  • ios