ipl 2022 csk vs pbks : மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பந்துவீச்சு மோசமாக இருந்ததே காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் ரவிந்திர ஜடேஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பந்துவீச்சு மோசமாக இருந்ததே காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் ரவிந்திர ஜடேஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முதல் காரணம், முதல் 4 பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததுதான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட்(30), உத்தப்பா(1),சான்ட்னர்(9), துபே(8) என வரிசையாக வீழ்ந்தது சிஎஸ்கே அணியை பெரிய சிக்கலில் கோர்த்துவிட்டது.
முதலில் சான்ட்னர் தொழில்ரீதியாக பெரிய பேட்ஸ்மேன்கிடையாது. நியூஸிலாந்து அணியில் அவருக்கு இருக்கும் இடமே கடைசி வரிசைதான். அவரை 3-வது வீரராக களமிறக்குவதற்குப் பதிலாக ஜடேஜாகூட களமிறங்கலாம்.
இப்போதுதான் தோனி கேப்டன் பதவியில் இல்லையே அவரைக் கூட 3-வது வீரராக களமிறக்கலாம். தொடக்கத்தில் விக்கெட் வீழ்ந்து இக்கட்டான தருணத்தில் விக்கெட்டை சரியவிடாமல் தடுக்க அனுபவமான பேட்ஸ்மேன் தேவை, அதை தோனி, ஜடேஜா செய்திருக்கலாம். நடுவரிசையில் அம்பதி ராயுடு மட்டும் நேற்று அதிரடியாக பெரிய ஷாட்களை ஆடாமல் ஆட்டமிழந்திருந்தால், நிச்சயம் சிஎஸ்கே நிலைமை மோசமாகியிருக்கும்.

கடைசி நேரத்தில் தோனி தனது வழக்கமான ஃபினிஷிங் டச்சை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், தோனியின் பலவீனத்தை நன்கு உணர்ந்து சொல்லிவைத்து விக்கெட்டை தூக்கிவிட்டனர் பஞ்சாப் அணியினர். பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்தான் தோல்விக்குக் காரணம் என்று கூலாம். ஆனால் பந்துவீச்சில் சிஎஸ்கே கோட்டைவிட்டது என்று கேப்டன் ஜடேஜா ஆதங்கப்படுகிறார்.
தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா அளித்த பேட்டியில் கூறுகையில் “ நாங்கள் நன்றாகத்தான் பந்துவீசித் தொடங்கினோம். புதிய பந்தில் லைன் லென்த்தில் நன்றாக எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ஆனால், கடைசி 2 முதல் 3 ஓவர்களில் கூடுதலாக 15 ரன்கள் வழங்கிவிட்டோம். எங்கள் திட்டப்படி எதுவுமே நடக்கவில்லை. பந்துவீச்சும் சரியில்லை.

ராயுடுவின் பேட்டிங் அருமையாக இருந்தது. 170 முதல் 175 ரன்களுக்குள் பஞ்சாப் அணியை சுருட்டியிருக்க வேண்டும். நாங்கள் சேஸிங் செய்யும்போது, முதல் 6 ஓவருக்குள் நல்லஸ்கோர் எடுத்திருக்க வேண்டும், அதுவும் நடக்கவில்லை, நல்ல ஸ்கோரும் அமையாததால், பின்னால் களமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இன்னும் நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொண்டு வலுவாக அடுத்த போட்டியில் வருவோம்” எனத் தெரிவித்தார்
