ipl 2022 : ஐபிஎல் டி20 தொடர்தான் எனக்கும், மைக்கேல் கிளார்க்கிற்கும் இடையிலான நட்புறவு கசந்து, முறிவதற்கு காரணமாக அமைந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடர்தான் எனக்கும், மைக்கேல் கிளார்க்கிற்கும் இடையிலான நட்புறவு கசந்து, முறிவதற்கு காரணமாக அமைந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மைக்கேல் கிளார்க் கேப்டனாக இருந்த போது அனைத்து அணிகளுக்கும் சவால் விடுக்கும்வகையில் விளையாடியது. அதற்கு காரணம் ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருந்தது, வலுவான பந்துவீச்சு, பேட்டிங் வரிசை முக்கியம். அதிலும் நடுவரிசையில் ஆல்ரவுண்டர் சைமன்ட்ஸ், கேப்டன் கிளார்க் இருவரும் ஜோடி சேர்ந்து பலமுறை அணிக்கு வெற்றித் தேடித்தந்துள்ளனர். பல இக்கட்டான தருணத்திலிருந்து அணியை மீட்டு வெற்றிக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தநிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் ஊடகங்களில் தனிப்பட்ட ரீதியில் தனித்தனியாக ஒருவரைஒருவர் விமர்சிக்கத் தொடங்கினர். இறுதியில் இருவருக்கும் இடையிலான நட்பு முறிந்து, அணியிலிருந்து இருவரும் காணாமல் போயினர்.
அதிலும் 2015ம் ஆண்டு மைக்கேல் கிளார்க்கின் தலைமைப் பண்பு குறித்து ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் கேள்வி எழுப்பி விமர்ச்திருந்தார். இதற்கு பதிலடியாக மைக்கேல் கிளார்க், 2008ம்ஆண்டில் ஒருநாள் தொடரில் சைமன்ட்ஸ் மது அருந்திவிட்டு களமிறங்கி விளையாடினார் என்று குண்டுபோட்டார். இருவரும் காட்டமாக ஒருவரை ஒருவர் விமர்சித்தனர்

2015ம் ஆண்டு ஆஷஸ் தொடர் குறித்த தனது பதிவில் கிளார்க் கூறுகையில் “ ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் ஊடகங்களில் என்னுடைய கேப்டன்ஷிப் குறித்து விமர்சித்துள்ளார். ஆனால், யாருடைய தலைமைப் பண்பு குறித்தும் விமர்சிக்க சைமன்ட்ஸுக்கு தகுதியில்லை. நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய மரியாதைக்குரிய விஷயம் ஆனால், சைமன்ட்ஸ் மதுஅருந்திவிட்டு கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடினார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆஸி. முன்னாள் வீரர் பிரட் லீ நடத்தும் “ தி பிரட் லீ போட்காஸ்ட்” நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் மனம் திறந்து பேசியிருந்தார். அதில் அவர் கூறுகையில் “ எனக்கும், மைக்கேல் கிளார்க்கிற்கும் இடையிலான நட்புறவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபின்புதான் இருவருக்கும் இடையிலான நட்புறவு முறிந்தது. 

ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியால் மைக்கேல் கிளார்க் ரூ.5.40 கோடிக்கு விலைக்குவாங்கப்பட்டார். அதிகமான விலைக்கு ஏலம்போன வெளிநாட்டுவீரராக மாறினார். அதிகமாக சம்பாதிக்க தொடங்கியதுதான் நட்புறவு முறியக் காரணம். 
ஆஸி. அணியில் எனக்குப்பின்புதான் கிளார்க் வந்தார், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பலமுறை போட்டிகளில் ஒன்றாக ஆடி அணியை வெல்ல வைத்திருக்கிறோம். எங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியதால், நெருங்கிய நட்புணர்வுடன்தான் இருந்தோம்.


ஐபிஎல் தொடர் தொடங்கியபோது மேத்யூ ஹைடன் என்னிடம், எனக்கு நல்ல ஊதியம் கிடைத்திருப்பதால், ஐபிஎல்தொடரில் விளையாடப் போகிறேன் என்று தெரிவித்தார். அதேநேரம், கிளார்க்கும், நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் அவருக்கு பொறாமையாக இருந்தது. பணம்தான் பல வேடி்ககையாயான விஷயங்களுக்கு காரணம் என்று நான் ஊகிக்றேன். பணம் நல்ல விஷயம்தான். ஆனால் அது விஷமும்கூட. நம்முடைய உறவில் விஷத்தை கலந்துவிடும். மேத்யூ ஹேடன் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது, என்னிடம் என்னிடம் என்ன கூறினார் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கவிரும்பவில்லை.என்னுடைய நட்பு ஹேடனுடன் நீண்டகாலம் இல்லை. இருப்பினும் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இங்கு அமர்ந்துகொண்டு யார் மீதும் சேற்றை வீச மாட்டேன்

இவ்வாறு சைமன்ட்ஸ் தெரிவித்தார்