IPL 12 th season will be held in march

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் சீசன் 12 போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதியே தொடங்கும் என்றும், அதில் முதல் 19 நாட்கள் இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் என்றும் மற்ற போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,2019-ஆம் ஆண்டுக்கான 12-வது சீசன் ஐபிஎல் தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐபிஎல் தொடருக்கு தனி பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை கைவிரித்து விட்டது. இதனால் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டுக்கு மாற்றப்பட உள்ளது. மேலும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு மே 30-ல் தொடங்க உள்ளதால்,ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலுக்கு பதிலாக மார்ச் 29-ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இருப்பினும் வெறும் 19 நாட்கள் மட்டும் அரபு நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் மீதமுள்ள மற்ற போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் உஎன்று அறிவிக்கனப்பட்டுள்ளது.

 ஐபிஎல் தொடர் எந்த தேதியில் நடைபெற்றாலும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் பல தரப்பில் எழுந்துள்ளது. அப்படியே கலந்து கொண்டாலும், உலகக் கோப்பை தொடருக்காக ஓய்வு கிடைப்பதை காரணம் காட்டி ஐபிஎல் தொடரை பல வீரர்கள் புறக்கணிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.