Introduction to sports flashs radio - you can get sports messages for 24 hours ...
விளையாட்டுச் செய்திகளை மட்டும் எல்லா நாட்களும், 24 மணி நேரமும் ஒலிபரப்ப புதிய ஆன்லைன் பண்பலை வானொலி ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
'ஸ்போர்ட்ஸ் ஃப்ளாஷஸ்' நிறுவனர் ராமன் ரஹேஜா நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "அனைத்து விளையாட்டுகள் குறித்த செய்திகளையும் வழங்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். 'ரேடியோ ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷஸ்' என்ற பெயரில் இந்த பண்பலை தொடங்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுச் செய்திகளை மட்டும் எல்லா நாட்களும், 24 மணி நேரமும் ஒலிபரப்ப புதிய ஆன்லைன் பண்பலை வானொலி மூலம் தெரிந்து கொள்ளலான்.
அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் விளையாட்டுகள் குறித்த தகவல்களை இதன்மூலம் கொண்டு செல்ல முடியும்.
'ஸ்போர்ட்ஸ்ஃபிளாஷஸ்' என்ற பெயரில் செல்லிடப்பேசி செயலியும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பண்பலை குறித்து அர்ஜூனா விருது பெற்ற குத்துச்சண்டை வீரர் அகில் குமார் கூறுகையில், 'அதிகமாக ரசிக்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இந்தப் பண்பலை மூலம், மற்ற விளையாட்டுகளும் மேலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.
