International Squash indian player won 8 times World Champion
சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எட்டு முறை உலக சாம்பியன் வென்ற மலேசியாவின் நிகோல் டேவிட்டை வீழ்த்தினார்.
சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் எகிப்தில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையும், 8 முறை உலக சாம்பியனான மலேசியாவின் நிகோல் டேவிட் நேற்று மோதினர்.
இதில், நிகோல் டேவிட்டை, ஜோஷ்னா 11-8, 11-8, 11-8 என்ற செட்களில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஜோஷ்னா தனது காலிறுதியில், இங்கிலாந்தின் லெளரா மசாரோ அல்லது ஹாங்காங்கின் ஜோய் சான் ஆகியோரில் ஒருவரை சந்திக்க இருக்கிறார்.
வெற்றிக்குப் பிறகு ஜோஷ்னா, "இந்த வெற்றி எனக்கே ஆச்சர்யமளிக்கிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நிகோலை எதிர்கொள்வேன் என எதிர்பார்த்திருந்தேன். எனினும், அவருக்கு எதிராக நெருக்கடி இன்றி, அனுபவித்து விளையாட முயற்சித்தேன்' என்றார்.
