International Chess Vishwanath Anand advanced in continously

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 8-வது சுற்றின் முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா ஐந்து புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றனர்.

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 8-வது சுற்றில் ஆனந்த், மேக்ஸைம் வச்சியருடன் சமன் செய்தார்.

லெவோன் ஆரோனியன், ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லருடன் சமன் செய்தார்.

மற்றொரு ரஷிய வீரரான செர்ஜி கர்ஜாகின், அமெரிக்காவின் வெஸ்லே சோவை வீழ்த்தினார்.

ரஷியாவின் நெபோம் நியாக்ஷி - நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர்கள் பாபியானோ கருணா - ஹிகாரு நாகமுரா ஆகியோர் இடையிலான ஆட்டங்கள் சமனில் முடிந்தன.