Asianet News TamilAsianet News Tamil

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியாவின் ஆட்டம் ஏமாற்றத்தையே தந்தது – ஹர்பஹன் சிங் சாடல்…

Indias play in the Champions trophy was disappointment - Harbhajan Singh
Indias play in the Champions trophy was disappointment - Harbhajan Singh
Author
First Published Jun 21, 2017, 12:34 PM IST


சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆணியின் ஆட்டம் ஏமாற்றத்தையே தந்தது என்று மூத்த பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாடினார்.

அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் படு தோல்வியை சந்திதத்து குறித்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியது:

“இறுதி ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் தரும் வகையில் பந்து வீசினர். மிடில் ஓவர்களில் அதிக ஓட்டங்கள் கொடுத்ததும், சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த இயலாமல் போனதுமே பாகிஸ்தான் அணி வெற்றியைப் பெற உதவியது.

தொடக்கத்தில் இருந்தே நாம் சரியாக ஆடவில்லை. சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாமல் போனதோடு அல்லாமல், அதிக ஓட்டங்களும் கொடுத்தனர். அதேபோல், ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களில் இருந்தது போல, இறுதி ஆட்டத்தில் அமைக்கவில்லை.

இறுதி ஆட்டத்தின் முக்கியமான தருணம் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. நோ பால் காரணமாக ஃபஹார் ஸமானின் விக்கெட்டை தவறவிட்டதே அந்தத் தருணம். அதைத் தொடர்ந்து ஆடிய அவர், ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து பறித்து பாகிஸ்தான் வசமாக்கிவிட்டார்.

சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுப்பதற்கு பதிலாக, அடித்து ஆடத் தொடங்கினார். 338 ஓட்டங்காள் என்பது எட்டுவதற்கு கடினமான இலக்காக இருந்தாலும், நமது அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான தொடக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்று நம்பினோம். ஆனால், ரோஹித், தவன், கோலி என அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்து நம்பிக்கையும் இந்தியாவுக்கு இருந்தது. இலங்கையைத் தவிர, நமக்கு எதிராக ஆடிய அனைத்து அணிகளையும் குறிப்பிடத்தக்க வகையில் தோற்கடித்திருந்தோம். அப்படி ஒரு சிறந்த அணி, அதிலும் பேட்டிங்கில் சிறந்து விளக்கும் அணி, சாம்பியன்ஸ் டிராபியில் ஒட்டுமொத்தமாக விளையாடியதை கணக்கில் கொண்டால் திருப்தி அளிப்பதாக இல்லை” என்று அவர் கூறினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios