Indias Neeraj Chopra participation in the Diamond League match
டைமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.
தடகளத்தில் முக்கிய போட்டிகளில் ஒன்றான டைமண்ட் லீக் போட்டி வரும் மே 4-ஆம் தேதி தொடங்குகிறது.
கத்தார் நாட்டின் டோஹாவில் நடக்கவுள்ள இதன் தொடக்க சுற்றில் காமன்வெல்த் போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.
நீரஜ் சோப்ராவின் தனிப்பட்ட சாதனை அளவு 86.487 மீ ஆகும். ஜூனியர் உலகக் கோப்பையில் தற்போதுள்ள சாதனை இதுவாகும்.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், உலக சாம்பியன் ஜோஹன்னஸ் வெட்டர், நடப்பு லீக் சாம்பியன் ஜகூப் வட்லெச், ஒலிம்பிக் வெள்ளி வீரர் ஜூலியஸ் யேகோ உள்ளிட்டோரும் இந்த டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த முறை டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்ற நீரஜ் மொத்தத்தில் 8-வது இடத்தைப் பெற்றார்.
