Asianet News TamilAsianet News Tamil

Paris Olympics 2024 Closing Ceremony: தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்தும் பிஆர் ஸ்ரீஜேஷ், மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் நிறைவு விழா ஆகஸ்ட் 12 ஆம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ள நிலையில் இந்திய தேசிய கொடியை ஏந்தி பிஆர் ஸ்ரீஜேஷ் மற்றும் மனு பாக்கர் இருவரும் அணி வகுப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

Indias 2 Medalist Manu Bhaker and Hockey Goal Keeper PR Sreejesh to Be Indias Flag Bearers at The Paris 2024 Olympics Closing Ceremony rsk
Author
First Published Aug 11, 2024, 6:50 PM IST | Last Updated Aug 11, 2024, 6:50 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 16 விளையாட்டுகளில் பங்கேற்றனர். அதோடு, இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி கொடுத்தனர்.

நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு செய்த விளையாட்டு அமைச்சகம்!

இதன் காரணமாக இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 71ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கம் என்று 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தில் இருந்தது. இதுவரையில் இந்தியா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று மொத்தமாக 41 பதக்கங்களை குவித்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் அதிகபட்சமாக ஹாக்கி 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், மல்யுத்த போட்டியிலும் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. சிறந்த ஒலிம்பிக் தொடராக கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் அமைந்துள்ளது.

வயநாடு மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்த இளம் கிராண்ட் செஸ் மாஸ்டர் டி குகேஷ்!

பாரிஸ் ஒலிம்பி தொடரில் அதிகபட்ச தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சீனா பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதுவரையில் சீனா 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 91 பதக்கங்களை வென்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று அமெரிக்கா, 38 தங்கப் பதக்கம், 42 வெள்ளிப் பதக்கம் மற்றும் 43 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 123 பதக்கங்களை குவித்து 2ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், ஜப்பான் 44, ஆஸ்திரேலியா 51, பிரான்ஸ் 63, இங்கிலாந்து 64, நெதர்லாந்து 33, கொரியா 31, ஜெர்மனி 32, இத்தாலி 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் தான் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது இன்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இன்று இரவு 12.30 மணிக்கு (ஆகஸ்ட் 12) நடைபெறும் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் ஹாக்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிஆர் ஸ்ரீஜேஷ் மற்றும் இந்தியாவிற்கு 2 பதக்கங்களை வென்று கொடுத்த மனு பாக்கர் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். தொடக்க விழாவில் இந்தியா சார்பில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios