Indian women announcement to clash with South Africa Captain Mithali Raj presides ...
தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிரணி, மிதாலி ராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கும்.
இந்தத் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கெளர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அணி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.
இந்திய அணியின் விவரம்:
மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கெளர், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஷ்த், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ், பூனம் ராவத், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜெமிமா ரோட்ரிகஸ்,
ஜுலன் கோஸ்வாமி, தீப்தி சர்மா, ஷிக்ஷா பாண்டே, மோனா மேஷ்ராம், பூஜா வஸ்த்ரகர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா.
