இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் யூகி பாம்ப்ரி பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெறுகிறது.  இதில் தனது கடைசி தகுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சகநாட்டவரான ராம்குமார் ராமநாதனுடன் மோதினார்.

இதில், 6-4, 6-2 என்ற செட்களில் வென்றார் யூகி பாம்ப்ரி  வென்றார். இத்துடன் ராம்குமாரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள யூகி பாம்ப்ரி, தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு யூகி முன்னேறுவது கடந்த 9 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். கடைசியாக யூகி பாம்ப்ரி கடந்த 2009-இல் மியாமி மாஸ்ட்ர்ஸ் போட்டியில் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது கூடுதல் தகவல்.

யூகி தனது முதல் பிரதான சுற்றில் பிரான்ஸ் நாட்டு தகுதிச்சுற்று வீரரான நிகோலஸ் மஹட்டை எதிர்கொள்கிறார். அதில் அவர் வெல்லும் பட்சத்தில், அடுத்த ஆட்டத்தில் உலகின் 12-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் லுகாஸ் புய்லேவுடன் மோதுவார்.