இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஒன்றில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் மோதுகின்றனர்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெறுகிறது.  இதன் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை வீழ்த்தினார். 

அதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 7-6(7/5), 7-5 என்ற செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ûஸ வென்றார்.

இதுகுறித்து செரீனா வில்லியம்ஸ், "நாங்கள் இருவரும் மோதவுள்ளோம். ஒருவர் போட்டியை விட்டு வெளியேற வேண்டும். உண்மையில், எனக்கெதிராக வேறு எவரேனும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனினும், இந்த மோதல் நிகழ்ந்தாக வேண்டியுள்ளது' என்றார்.

இதுகுறித்து வீனஸ் வில்லியம்ஸ், "செரீனா சறுக்கல்களை சந்தித்ததாக தெரியவில்லை. அவர் மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளார்' என்றார். 

செரீனா இந்த முறை சாம்பியன் ஆகும் பட்சத்தில், இன்டியன் வெல்ஸ் பட்டத்தை 3 முறை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.