- Home
- Sports
- Sports Cricket
- T20 WC: சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. பலம்வாய்ந்த எதிரணிகள்.. முழு அட்டவணை!
T20 WC: சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. பலம்வாய்ந்த எதிரணிகள்.. முழு அட்டவணை!
T20 World Cup 2026: டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா எந்தெந்த அணிகளுடன் மோதுகிறது? என்பது குறித்த அட்டவணை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை 2026
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணி ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. பாகிஸ்தான் அணி நாளை நமீபியாவை தோற்கடித்தால் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும்.
இந்தியாவின் சூப்பர் 8 சுற்று பாதை
இந்திய அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. அதன்பின்பு நமீபியாவையும், பாகிஸ்தானையும் தோற்கடித்து சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது. இந்திய அணி ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தை நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நெதர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது.
சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகளுடன் மோதல்?
டி20 சர்வதேசப் போட்டிகளில் இரு நாடுகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. 2022 டி20 உலகக்கோப்பையில் சிட்னியில் நடந்த அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. குரூப் 8 சுற்றினை பொறுத்தவரை இந்திய அணி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாட உள்ளது.
இந்திய அணி பிப்ரவரி 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னையிலும் மேட்ச்
பின்னர் இந்திய அணி பிப்ரவரி 26ம் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியுடன் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸுடன் மோதி சூப்பர் 8 சுற்றை நிறைவு செய்கிறது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்
இந்தியா மோத உள்ள தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கடும் சவால் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே வேளையில் ஆஸ்திரேலியாவையே வீழ்த்திய ஜிம்பாப்வேயையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.

