MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs Netherlands: ஸ்பின்னர் அதிரடி நீக்கம்.. தமிழக வீரர் கம்பேக்.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

India vs Netherlands: ஸ்பின்னர் அதிரடி நீக்கம்.. தமிழக வீரர் கம்பேக்.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

T20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்தியாவின் பிளேயிங் லெவன் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 17 2026, 07:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா vs நெதர்லாந்து போட்டி
Image Credit : Getty

இந்தியா vs நெதர்லாந்து போட்டி

கிரிக்கெட்டின் அரசன் ஆஸ்திரேலியா வெளியேற்றம்; ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி என டி20 உலகக்கோப்பை சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. நமது இந்திய அணி அமெரிக்காவுடன் ஓரளவு கஷ்டப்பட்டு வெற்றி பெற்றாலும் நமீபியா மற்றும் பரம எதிரியான பாகிஸ்தானை பந்தாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

லீக் சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை (பிப்ரவரி 18) நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு
Image Credit : AFP

ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய அணியின் நம்பர் 1 பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம்பெறலாம். 

இதேபோல் கடந்த போட்டியில் இடம்பெற்றிருந்த ஸ்பின்னர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் இடம்பெறுவார். காயத்தில் இருந்து குணமடைந்த வாஷிங்டன் சுந்தரை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாக களமிறக்கி அவரது உடற்தகுதியை சோதனை செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியா அவுட்.. 'சூப்பர்' 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே!
Related image2
SL vs AUS: ஆஸ்திரேலியாவை அலற விட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து நடையை கட்டும் ஆஸி!
34
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை
Image Credit : Getty

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை

மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா விளையாடுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை. அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஒப்பனிங்கில் களமிறங்குவார்கள். 

திலக் வர்மா ஒன்டவுனிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதன்பிறகும் களம் காண்பார்கள். மிடில் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், பின்வரிசையில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே பலம் சேர்க்க உள்ளனர்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : ANI

இந்திய அணி பிளேயிங் லெவன்

பவுலிங்கை பொறுத்தவரை பாஸ்ட் பவுலிங் யூனிட்டில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தேவைப்பட்டால் ஷிவம் துபே உள்ளனர். ஸ்பினர்களை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேலுடன் வாஷிங்டன் சுந்தரும் இணைவார். ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மாவுக்கும் பவுலிங்கில் வாய்ப்பு வழங்கப்படலாம்.

 நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Recommended image2
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி
Recommended image3
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியா அவுட்.. 'சூப்பர்' 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே!
Recommended image2
SL vs AUS: ஆஸ்திரேலியாவை அலற விட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து நடையை கட்டும் ஆஸி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved