காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் டேபிள் டென்னில் விளையாட்டின் அரையிறுதி ஆட்டம் இந்தியா - நைஜீரியா இடையே நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜி சத்ரியன் மற்றும் ஹர்மீத் தேசாய் ஆகியோர், நைஜீரியாவின் ஓலிஜித் ஓமோடாயோ மற்றும் அபியோடன் போட் ஆகியோரை வீழ்த்தினர்.

அடுத்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் சிங்கப்பூர் வீரர் கிளாரன்ஸ் சூவை எதிர்த்து விளையாடினார். இந்திய அணி சிங்கப்பூர் அணியை 3- 1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்கவைத்து கொண்டது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.