Indian Open Badminton players who all are advanced to Second Round

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ருத்விகா ஷிவானி, அகர்ஷி காஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால் 21-15, 21-9 என்ற செட்களில் டென்மார்க்கின் சோஃபி தாஹலை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது 2-வது சுற்றில் மற்றொரு டென்மார்க் வீராங்கனையான லைன் ஜேர்ஸ்ஃபெல்டட்டை எதிர்கொள்கிறார் சாய்னா.

இதனிடையே, நடப்புச் சாம்பியனான சிந்து முதல் சுற்றில் 21-10, 21-13 என்ற செட்களில் டென்மார்க்கின் நடாலியா ரோடேவை வென்றார்.

சிந்து தனது 2-வது சுற்றில் இந்தியாவின் வைதேகி செளதரி அல்லது பல்கேரியாவின் லின்டா ஸெட்சிரியை எதிர்கொள்வார்.

இதர ஆட்டங்களில் ருத்விகா ஷிவானி, அகர்ஷி காஷ்யப் ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் 21-11, 17-21, 21-17 என்ற செட்களில் இங்கிலாந்தின் ராஜீவ் அவ்செப்பை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.