Indian Open Badminton Indian players in quarter-finals
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், சமீர் வர்மா, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை, பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை, மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காஷ்யப் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-19, 19-21, 21-12 என்ற செட்களில் சகநாட்டவரான ஷ்ரேயன்ஷ் ஜெய்ஸ்வாலை தோற்கடித்தார்.
அதே சுற்றில் சமீர் வர்மா 21-18, 19-21, 21-17 என்ற செட்களில் இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை வென்றார்.
மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை 21-16, 15-21, 23-21 என்ற செட்களில் மலேசியாவின் டான் கியான் மெங் - லாய் பெய் ஜிங் இணை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
அதே பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 21-10, 21-19 என்ற செட்களில் மலேசியாவின் யோகேந்திரன் கிருஷ்ணன் - இந்தியாவின் பிரஜக்தா சாவந்த் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை 21-11, 21-15 என்ற செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான துஷர் சர்மா - சந்திரபூஷன் திரிபாதியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
