Indian men and women hockey team coach changed

இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளின் பயிற்சியாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 

இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளின் பயிற்சியாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மகளிர் அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் ஆடவர் அணிக்கும், அதே நேரத்தில் ஆடவர் அணி பயிற்சியாளராக இருந்த ஜோயர்ட் மார்ஜின் மகளிர் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டி ஹாக்கியில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பதக்கம் எதையும் வெல்லாமல் வெறுங்கையுடன் நாடு திரும்பின. இது ஹாக்கி விளையாட்டு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டச்சு நாட்டைச் சேர்ந்த மார்ஜின் ஆடவர் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகவும், மகளிர் அணிக்கு ஹரேந்திர சிங் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்து வருகின்ற நிலையில் இந்த அதிரடி மாற்றங்களை ஹாக்கி இந்தியா மேற்கொண்டுள்ளது. 

இதுதொடர்பாக அதன் பொதுச் செயலாளர் முகமது முஷ்டாக் அகமது, "ஹரேந்திர சிங் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர். ஹாக்கி இந்தியா லீக், ஜூனியர் ஆடவர் அணிகளை அவர் திறம்பட கையாண்டுள்ளார். 

அதேநேரத்தில் மார்ஜின் ஏற்கெனவே மகளிர் அணி பயிற்சியாளராக இருந்த போது சிறப்பாக செயல்பட்டார். கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக காமன்வெல்த்தில் இந்தியா பதக்கம் பெறாத நிலை ஏற்பட்டது.

எனவே ஆடவர், மகளிர் அணிகளின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. ஹரேந்திர சிங் பயிற்சியில் 2016-ஆம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை இந்தியா வென்றது. மகளிர் அணி ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தையே வென்றிருந்தது.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பையும் இந்தியா வென்றிருந்தது. ஆனால் மார்ஜின் பயிற்சியில் ஆடவர் அணி பின்னடவையே சந்தித்துள்ளது. எனினும் அவரது தலைமையில் ஆசியக் கோப்பை, ஹாக்கி லீக் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை ஆடவர் அணி வென்றது. 

வரும் மே 13-ஆம் தேதி கொரியாவில் நடைபெறும் ஆசிய மகளிர் சாம்பியன் ôக்கி போட்டியை மார்ஜின் தலைமையில் இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. இரு பயிற்சியாளர்களும் தங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.