Indian Hero Nitin Tomar sold for Rs 93 lakh

புரோ கபடி லீக் போட்டியின் ஐந்தாவது சீசனின் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலத்தில், இந்திய வீரர் நிதின் தோமரை ரூ.93 இலட்சத்துக்கு உத்திரப் பிரதேச அணி வாங்கியது.

வருகிற ஜூலை மாதம் புரோ கபடி லீக் போட்டியின் ஐந்தாவது சீசன் நடைபெறவுள்ளது.

அந்தப் போட்டியில் பங்கேற்கும் 12 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் இரண்டு நாள் ஏலம் நேற்றுத் தொடங்கியது.

இதில் இந்தியாவின் நிதின் தோமரை இந்த ஆண்டு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேச அணி அதிகபட்சமாக ரூ.93 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ.20 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியாவின் ரோஹித் குமாரை ரூ.81 இலட்சத்துக்கு பெங்களூரு புல்ஸ் அணியும்,

மஞ்ஜித் சில்லாரை ரூ.75.5 இலட்சத்துக்கு ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும்,

சுர்ஜீத் சிங்கை ரூ.73 இலட்சத்துக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த கே.செல்வமணியை ரூ.73 இலட்சத்திற்கு ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் வாங்கியுள்ளது.

அதேபோன்று ராகுல் செளதரியை தெலுகு டைட்டன்ஸ் அணியும்,

அனுப் குமாரை யு மும்பா அணியும்,

ஜங் குன்லியை பெங்கால் வாரியர்ஸ் அணியும் தேர்வு செய்துள்ளன.

மீரஜ் ஷேக்கை தபங் தில்லி அணியும்,

பர்தீப் நர்வாலை பாட்னா பைரேட்ஸ் அணியும், தீபக் ஹூடாவை புணேரி பல்தான் அணியும் வாங்கியுள்ளன.

முதல் நாள் ஏலத்தில் 12 அணிகள் தங்களுக்கான 60 வீரர்களை மொத்தம் ரூ.27.27 கோடிக்கு வாங்கின.