Indian football team capture the intercontinental trophy
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பையில் நடந்தது.
வரும் 2019 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் கென்யா, நியூஸிலாந்து, சீன தைபே அணிகள் இதில் கலந்து கொண்டன.
அதன்படி, நேற்று நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் - கென்யாவும் மோதின. தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
கேப்டன் சுனில் சேத்ரி அபாரமாக ஆடி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்மூலம் இறுதியில் 2-0 என கென்யாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
உலகின் இரண்டாவது அதிக கோலடித்த வீரராக திகழும் சேத்ரி, பிரபல வீரர் மெஸ்ஸியின் 64 கோல்கள் அடித்த சாதனையையும் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்த போட்டியில் தனது 100-வது ஆட்டதிலும் பங்கேற்று விளையாடினார் என்பது கொசுறு தகவல்.
