ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தொடரில் இதுவரை ஆடாத சில இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தொடரில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் ரோஹித்தும் துணை கேப்டன் தவானும் இல்லாததால் கேப்டன்சியை தோனி கவனித்துக்கொண்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்களை எடுத்தது. 253 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி டிரா செய்தது. 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டானார். இதையடுத்து போட்டி டிரா ஆனது. 

இது அணி வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. 2 பந்தில் ஒரு ரன் என்பது எளிதாக எடுக்கப்பட வேண்டியது. ஆனால் ஜடேஜா அந்த நேரத்தில் தேவையில்லாமல் தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தமுடியாமல் போனது உண்மையாகவே பெரும் ஏமாற்றம்தான். 

போட்டி டிராவில் முடிந்ததும், வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல மைதானத்தில் இருந்த ரசிகர்களும் பேரதிர்ச்சியடைந்தனர். அதிலும் ஒரு சிறுவன் கண்ணீர் விட்டு அழுததும் அவனது தந்தை அவனை ஆற்றுப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…