சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் அமித்குமார் பாங்கல், கெளரவ் பிதுரி, சிவ தாபா, மனோஜ் குமார், சதீஷ் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் தங்கப் பதக்கம் வென்றனர்.

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் செக்.குடியரசில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் ஆடவர் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித்குமார் பாங்கல் தனது இறுதிச் சுற்றில் சகநாட்டவரான கவிந்தர் பிஸ்ட்டை தோற்கடித்து தங்கம் வென்றார்.

அதேபோன்று 56 கிலோ எடைப் பிரிவில் கெளரவ் பிதுரி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்தின் இவானோவ் ஜெரோஸ்லாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மற்றொரு பிரிவான 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சிவ தாபா தனது இறுதிச் சுற்றில் ஸ்லோவேக்கியாவின் பிலிப் மெஸ்ஸரோஸுடன் மோதினார். இதில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிப் மெஸ்ஸரோஸை தோற்கடித்தார் சிவ தாபா.

அதேபோன்று 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மனோஜ் குமார், செக்.குடியரசின் டேவிட்டுடன் மோதி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றார்.

மற்றொரு பிரிவான 91 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சதீஷ் குமார், ஜெர்மனியின் மேக்ஸ் கெல்லருடன் மோதி, அவரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

அதேநேரத்தில் இந்தியாவின் கவிந்தர் பிஸ்ட், மணீஷ் பன்வார் ஆகியோர் 81 கிலோ எடைப் பிரிவில் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், சுமித் சங்வான் 91 கிலோ எடைப் பிரிவில் வெண்கலமும் வென்றனர்.