Indian boxers to advance to the next round of Asian Boxing Championship
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிவ தாபா, சுமித் சங்வான் ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் காலிறுதிச் சுற்றிற்கு முன்னேறி வெற்றிநடைப் போட்டனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள சிவ தாபா, தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கைர்ஜிஸ்தானின் ஒமர்பெக் மலாபெகோவுடன் மோதினார். அவரை கடுமையான போராட்டத்திற்கு பிறகு வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.
அடுத்ததாக போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சிவதாபா தனது காலிறுதியில், சீன தைபேவின் சு என் லாயுடன் இன்று மோதுகிறார்.
அதேபோன்று, இந்தப் போட்டியின் 91 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் சுமித் சங்வான், மங்கோலியாவின் எர்டென்பயார் சேன்டாக்சுரெனை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
சுமித் சங்வான் தனது காலிறுதிக்யில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருப்பவரும், சீன வீரருமான ஃபெங்காய் யுவை எதிர்கொள்கிறார்.
இந்தப் போட்டியில் இதுவரை, விகாஸ் கிருஷண், கெளரவ் பிதூரி, அமித் பன்கால் ஆகிய இந்திய வீரர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
