Indian boxers lose in Asian Games

ஆசிய குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர்களான சதீஷ் குமார், மணீஷ் பன்வார், மனோஜ் குமார், கவிந்தர் சிங் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

ஆசிய குத்துச்சண்டை போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் சதீஷ் குமார் 91 கிலோ எடைப் பிரிவின் காலிறுதியில் கஜகஸ்தானின் கம்ஷிபெக்கிடம் மோதினார்

இதில், கம்ஷிபெக், சதீஷ் குமாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியின், இந்திய வீரரான மணீஷ் பன்வார் 81 கிலோ எடைப் பிரிவின் காலிறுதியில் துர்க்மேனிஸ்தானின் நூர்யாக்டியுடன் மோதி, அதில் தோல்வி கண்டார்.

மற்ற இந்தியர்களான மனோஜ் குமார் 69 கிலோ எடைப் பிரிவிலும், கவிந்தர் சிங் 49 கிலோ எடைப் பிரிவிலும் தோல்விகண்டு தங்களின் பயணத்தை காலிறுதியிலேயே முடித்துக் கொண்டனர்.