நான் செய்த பெரிய தவறு கணவனாக இருப்பது தான்...வாழ்கையை  வெறுத்த முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி பல புகார்களை அடுக்கினர்.

அதன்படி, ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும்,ஷமி குடும்பத்தினர் தன்னை கொலை செய்ய கூட முற்பட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

மனைவி ஜகான் அளித்த புகாரின் அடிப்படையில்,ஷமி மற்றும் அவரது  குடும்பத்தினரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

பின்னர்,ஜகானின் அனைத்து குற்றத்திற்கும் மறுப்பு தெரிவித்து உள்ளார் ஷமி

இந்நிலையில்,இது குறித்து பேட்டி அளித்துள்ள ஷமி, தான் செய்த பெரிய தவறு மனைவி ஜகானுக்கு கணவனாக இருப்பது மட்டுமே என  தெரிவித்து உள்ளார்

மேலும்,தன் குடும்பத்தின் மானத்தை வாங்கிவிட்டார் ஜகான் என தெரிவித்து உள்ளார்.

மேலும்," நாட்டுக்காக உயிரை கூட விடுவேனே தவிர,சூதாட்டத்தில் என்றும் ஈடுபடமாட்டேன்...ஜகான் கூறும் இது போன்ற அனைத்து குற்றச்சாட்டும்  தீர விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்

முகமது ஷமி மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளால்,அவரை பிசிசிஐ எதிர்காலப் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது மனைவியை யாரோ பின்னல் இருந்து இயக்குகிறார்கள் என்றும் தெரிவித்து உள்ளார் ஷமி