Indian Bank to hold aiopi pantati champion

இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு வலைகோள் பந்தாட்ட (ஹாக்கி) போட்டியில் ஐஓபி-யை தோற்கடித்து இந்தியன் வங்கி சாம்பியன் வென்றது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு போட்டி நேற்று நடைபெற்றது.

இதன் இறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை (ஐஓபி) தோற்கடித்து சாம்பியன் ஆனது.

இந்தியன் வங்கி வீரர் ஞானவேல் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் ஐசிஎப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் வரித்துறை அணியைத் தோற்கடித்தது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் வங்கி அணிக்கு கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஐஓபி அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பிடித்த ஐசிஎப் அணிக்கு ரூ.20 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

ஐஓபி வீரர் ரஹீல் தொடர்நாயகன் விருதை வென்றார்.