indian bank cup for hockey

இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு வளைகோற் பந்தாட்ட போட்டி வரும் 11-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தப் போட்டி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான கோப்பையை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் மகேஷ் குமார் ஜெயின் அறிமுகப்படுத்தினார்.

அப்போது இது தொடர்பாக கூறியது:

“இந்தப் போட்டி 6 நாள்கள் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இதில் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, தெற்கு ரயில்வே, ஐசிஎப், தமிழ்நாடு காவல்துறை, வருமான வரித்துறை, சென்னை மாநகர காவல்துறை, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய கலால் வரித்துறை, ஹாக்கி அகாதெமி, கணக்குத் தணிக்கைத் துறை அலுவலகம் (ஏஜிஎஸ்), லயோலா கல்லூரி ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகக்கு கோப்பையுடன் ரூ.30 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகக்கு கோப்பையுடன் ரூ.20 ஆயிரம் வழங்கப்படவுள்ளன.

இது தவிர ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளும் வழங்கப்படவுள்ளன” என்றுக் கூறினார்.