India youngest player got first rank in international shootings rankings...
சர்வதேச துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷஸார் ரிஸ்வி முதலிடம் பிடித்து அசத்தினார்..
கொரியாவின் சங்வானில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ரிஸ்வி 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 1654 புள்ளிகளுடன் அவர் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த மார்ச் மாதம் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் ரிஸ்வி உலக சாதனையுடன் தங்கம் வென்றிருந்தார் என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ரிஸ்வி முதலிடம் பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்களான ரவிக்குமார் 4-வது இடமும், தீபக்குமார் 9-ஆம் இடமும் பிடித்து உள்ளனர்.
அதேபோன்று, 50 மீ. ரைபிள் பிரிவில் அகில் ஷரோன் 4-வது இடமும், சஞ்சீவ் ராஜ்புத் 8-வது இடமும் பிடித்தனர்.
மகளிர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனு பேக்கர் இதே பிரிவில் 4-ஆம் இடம் பெற்றுள்ளார். மெஹுலி கோஷ் 7-வது இடமும், அபூர்வி சந்தேலா 11-வது இடமும், அஞ்சும் 12-வதுஇடமும் பிடித்துள்ளனர்.
