நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் தேர்வு செய்ததால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. டி தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், டி20 தொடரையாவது வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களம் காண்கின்றன. 

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. வெலிங்டனில் இன்று நடக்கும் முதல் போட்டியில் ஆட வாய்ப்புள்ள உத்தேச இந்திய அணியை நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம். முதல் டி20 போட்டி.. நீங்க 2 பேரும் தேவையில்ல!! தமிழக வீரருக்கு இடம் உறுதி.. தம்பி கண்டிப்பா டீம்ல இருப்பாரு!! உத்தேச இந்திய அணி

நாம் தேர்வு செய்திருந்த அணிக்கும், முதல் போட்டியில் ஆடும் இந்திய அணிக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. ஷுப்மன் கில் ஆடலாம் என்று ஏசியாநெட் தமிழ் இணையதளம் சார்பில் கணித்திருந்தோம். ஆனால் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் ஆடுகிறார். அதேபோல ஸ்பின்னராக குல்தீப் யாதவ் ஆடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாஹல் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். மற்றபடி அனைத்து வீரர்களும் நமது தளம் சார்பில் கணிக்கப்பட்ட வீரர்கள்தான் ஆடுகின்றனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பவுலிங் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சாஹல்.