நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி அபாரமாக வென்றது. ஒருநாள் தொடரில் 4வது போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக ஆடியது. 

ஒருநாள் தொடரை வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. டி தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், டி20 தொடரையாவது வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களம் காண்கின்றன. 

டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் கண்டிப்பாக இடம்பெறுவர். விராட் கோலி அதேபோல ஆல்ரவுண்டர்களாக பாண்டியா சகோதரர்கள் இடம்பெறுவர். ஒருநாள் அணியில் தங்களுக்கான இடத்தை பிடித்துவிட்ட ராயுடுவும் கேதர் ஜாதவும் டி20 அணியில் இடம்பெற வாய்ப்பேயில்லை. 

ராகுலுக்கு பதில் அணியில் இடம்பிடித்த ஷுப்மன் கில், மூன்றாம் வரிசையில் இறங்குவார். நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட், ஐந்தாம் வரிசையில் தோனி, ஆறாவது வீரராக தினேஷ் கார்த்திக் இறங்குவர். ஸ்பின் ஆல்ரவுண்டர் குருணல் பாண்டியா ஆடுவதால் குல்தீப்புடன் அவர் ஸ்பின் பார்ட்னராக இருப்பார். சாஹல் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமாரும் கலீலும் இருப்பர். மூன்றாவது ஆப்ஷனாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருப்பார். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.