இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் தொடங்கி நடந்துவருகிறது. 

முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனான நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மெல்போர்னில் இன்று நடந்துவருகிறது. போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய இரண்டே பந்தில் மழை வந்ததால் மீண்டும் 20 நிமிடங்கள் போட்டி தடைபட்டது. மழை நின்றபிறகு ஆட்டம் தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலுமே சோபிக்காத ராயுடுவிற்கு பதிலாக பேட்டிங் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சிராஜிற்கு பதிலாக வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவிற்கு பதிலாக அவரது ஸ்பின் பார்ட்னர் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், கோலி(கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல்.