இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில், மூன்றாவது போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பவுலிங் தேர்வு செய்தார். 

இலக்கை விரட்டுவதில் வல்லவரான கோலி, பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் பிடித்து இலக்கை விரட்டத்தான் விரும்புவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 323 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் பேட்டிங் தேர்வு செய்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

ஆட்டத்தின் இரண்டாம் பாதி மாலைக்கு மேல் இரவில் ஆடப்பட்டதால் ஆடுகளத்தின் சூழல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியை நெருங்கியது. கடைசி நேர பரபரப்பில் போட்டி டிராவில் முடிந்தது. 

எனவே இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டாவது பேட்டிங் ஆடவைக்க விரும்பாத கோலி, டாஸ் வென்றதும் பவுலிங்கை தேர்வு செய்தார். அந்த அணி டாஸ் வென்றிருந்தாலும் பவுலிங் தான் தேர்வு செய்திருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.