india won australia in test series
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்றது.
பெங்களூரில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்த அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 2 வது இன்னிங்க்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ஆட்டத்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்தது.
லோகேஷ் ராகுல், புஜாரா அபாரமாக ஆடி அணிக்கு வலு சேர்ந்தனர். 2 வது இன்னிங்க்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்து 187 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா.
இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 188 ரன்கள் இந்தியா நிர்ணயித்தது. பின்னர், ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்த்திரேலிய அணியை விழ்த்தியது.
இந்திய அணியல் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
