ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 2-1 என வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 2-1 என வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என தொடர் சமனானது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
231 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்களிலும் தவன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக ஆடிய கோலி, 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
கோலியின் விக்கெட்டுக்கு பிறகு தோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்த தோனி, இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை அடித்தார். ஹாட்ரிக் அரைசதம் அடித்த தோனி, தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்து ஆடினார். தோனிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேதர் ஜாதவும் அரைசதம் அடித்தார்.
கடைசிவரை அவசரப்படாமல் இருவரும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி, கடைசி ஓவரில் இலக்கை எட்டினர். 113 ரன்களில் 3வது விக்கெட்டாக கோலியின் விக்கெட்டை இழந்த இந்திய அணி, அதன்பிறகு விக்கெட்டை இழக்கவில்லை. 4வது விக்கெட்டுக்கு தோனியுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் சிறப்பாக ஆட, 50வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் தோனி 87 ரன்களையும் கேதர் ஜாதவ் 61 ரன்களையும் குவித்திருந்தனர். இந்த போட்டியில் வென்றதன்மூலம் 2-1 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 18, 2019, 4:28 PM IST