ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் இன்னும் ஒரு பெஸ்ட் ஃபினிஷர் தான் என்று சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்து நிரூபித்துள்ளார் தோனி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் இன்னும் ஒரு பெஸ்ட் ஃபினிஷர் தான் என்று சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்து நிரூபித்துள்ளார் தோனி.
அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 298 ரன்களை குவித்தது. ஷான் மார்ஷின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இன்னும் அதிகமான ஸ்கோரை எட்டியிருக்கலாம். ஆனால் கடைசி நேரத்தில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் மேக்ஸ்வெல் மற்றும் ஷான் மார்ஷ் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்தியதால் 298 ரன்களுக்கு சுருட்ட முடிந்தது.
299 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்து தவான் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அதிரடியை தன் கையில் எடுத்த ரோஹித் சர்மா, 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த ராயுடுவும் நிதானமாக ஆடினார். எனினும் ராயுடு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 24 ரன்களில் ராயுடு நடையை கட்டினார். கடந்த முறை 3 ரன்களில் வெளியேறிய கிங் கோலி, இந்த முறை சதம் விளாசினார். சதமடித்த கோலி, இலக்கை வெற்றிகரமாக எட்டாமல் 104 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.
பின்னர் தோனியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அனுபவம் வாய்ந்த இருவரும் அவசரப்படாமல் நிதானமாக வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். கோலி அவுட்டான பிறகு பொறுப்பை கையில் எடுத்துக்கொண்ட தோனி, சிறப்பாக ஆடினார். தினேஷ் கார்த்திக்கும் நிதானமாக ரன்களை சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி, தனக்கே உரிய ஸ்டைலில் வெற்றியை உறுதி செய்தார் தோனி. இரண்டாவது பந்தில் சிங்கிள் தட்டினார். இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் அரைசதமடித்த தோனி, இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தினார். ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில்லாமல் தவித்துவந்த தோனி, மீண்டும் ஃபார்முக்கு வந்து சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்ததன் மூலம் தான் இன்னும் ஒரு பெஸ்ட் ஃபினிஷர் தான் என்பதை உரக்க சொல்லியுள்ளார்.
இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனானது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 15, 2019, 6:11 PM IST