India will soon be participating in the FIFA football tournament - Minister of Sports

கால்பந்து விளையாட்டில் திறமைகளுக்கு சரியான முறையில் வாய்ப்பு கிடைத்தால் கூடிய விரைவில் இந்தியாவும் ஃபிஃபா தொடரில் பங்கேற்கும்.

டெல்லியில் ரஷிய தூதரகத்தால் நடத்தப்பட்ட அரசு முறை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்றது. 

இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் மற்றும் இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலய் குடஷேவ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர், "இந்தியாவில் கால்பந்துக்கான ஆதரவு பெருகி வருகிறது. ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சிகளில் கண்டுகளித்தவர்களின் அதே எண்ணிக்கை தற்போது ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை தொடரையும் கண்டுகளித்தது.

இதில் இந்தியா பங்கேற்கவில்லை என்றாலும் கால்பந்து விளையாட்டின் திறமை இங்கு அதிகம் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 

இந்த திறமைகளுக்கு சரியான முறையில் வாய்ப்பு கிடைத்தால் கூடிய விரைவில் இந்தியாவும் ஃபிஃபா தொடரில் பங்கேற்கும்.

கால்பந்து மட்டும் என்றில்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் இந்தியாவில் திறமை நிறைந்திருக்கிறது. 

ஒவ்வொரு பள்ளியும் தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணில் மட்டும் கவலைகொள்வதை விடுத்து, விளையாட்டுக்கு சரியான அடித்தளம் ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.