ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. ஐசிசி நிகழ்வுகளில் நியூசிலாந்தை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது.

IND vs NZ Champions Trophy 2025: துபாயில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்த தொடரில் இந்தியா இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. அதே நேரத்தில், நியூசிலாந்து ஒரு முறை இந்திய அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

ஐசிசி போட்டிகளில் எந்த அணி ஆதிக்கம்?

ஐசிசி போட்டிகளில் சமீப காலங்களில் இந்தியாவும், நியூசிலாந்தும் சிறப்பாக விளையாடி உள்ளன. அதனால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 முதல் ஐசிசி வெள்ளை பந்து போட்டிகளில் இந்தியா 86 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 70 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 15 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. 

இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 77 போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கூட்டாக மூன்றாவது இடத்தில் உள்ளன. இரண்டு அணிகளும் 77 போட்டிகளில் விளையாடி 45 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நியூசிலாந்து 27 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 29 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளன.

நாக் அவுட் போட்டியில் எந்த அணி மாஸ்?

அணிபோட்டிவெற்றிதோல்விடை
இந்தியா8670151
ஆஸ்திரேலியா7749230
நியூசிலாந்து7745273
தென்னாப்பிரிக்கா7745292
இங்கிலாந்து8041361

நியூசிலாந்து 8 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

2011 முதல் இந்தியாவும், நியூசிலாந்தும் நாக் அவுட் போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. 2011 முதல் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு 14 ஐசிசி ஆண்கள் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் அடங்கும். இதில் இந்தியா இரண்டை தவிர மற்ற அனைத்திலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

2011 முதல் இதுவரை இந்தியா 12 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் நான்கு முறை இந்தியா அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா 5 முறை இரண்டாம் இடத்தையும், 3 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. மறுபுறம் நியூசிலாந்தும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது. 2011 முதல் 2025 வரை நியூசிலாந்து 8 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து நான்கு முறை அரையிறுதியில் தோற்றது. மூன்று முறை இரண்டாம் இடம் பிடித்தது. நியூசிலாந்து 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல இந்தியாவை தோற்கடித்தது.