India vs New Zealand Champions Trophy Final: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. 

India vs New Zealand Champions Trophy Final: நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் கோப்பையை கைப்பற்ற இன்று தனது மோதலை தொடங்கி விடடன. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்ச்செல் சான்ட்னர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் களம் கண்ட அணியே இறுதிப்போட்டியிலும் களமிறங்கியுள்ளது. இந்திய அணி வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் என 4 ஸ்பின்னர்களுடனும், ஒரு பாஸ்ட் பவுலர் மற்றும் 1 மீடியம் பாஸ்ட் பவுலருடன் களமிறங்கி இருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்:‍ ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்ரவர்த்தி.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை காயம் அடைந்த மேட் ஹென்றி இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நாதன் ஸ்மித் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜேமிசன், டேரில் மிட்ச்செல் 

இந்திய அணியில் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் வழக்கம்போல் ஒப்பனிங்கில் விளையாடுவார்கள். நடுவரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல் பலம் சேர்க்க இருக்கின்றனர். பின்வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா அதிரடியில் ரன் சேர்க்க உள்ளனர்.