பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய அணி தனது அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியைத் தோற்கடித்தது.

ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.2 ஓவர்களில் 174 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சுரங்கா சம்பத் 49, சந்தனா தேசப்பிரியா 42 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ரன்பீர் பவார், சுநீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த இந்திய அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய வீரர்கள் பிரகாஷ் 52 பந்துகளில் 115, அஜய்குமார் ரெட்டி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.