தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா 20 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
 
மூன்றாவது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கொழும்புவில் நேற்று நடைபெற்றன. 

மொத்தம் 7 நாடுகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இந்தியா 20 தங்கங்கள்ள், 22 வெள்ளிகள், 8 வெண்கலங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றன.

இதில், 12 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலத்துடன் இலங்கை இரண்டாமிடத்தை பெற்றது. தலா 1 வெள்ளி, வெண்கலத்துடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தை பெற்றது.
 
இந்திய அணியினர் ஐந்து புதிய சாதனைகளையும் படைத்தனர். இந்தப் போட்டியில் வென்ற இந்திய ஜூனியர் அணியினர் வரும் ஜூன் 7-ஆம் தேதி ஜப்பான் ஜிபுவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்கின்றனர்.