India Prakash Nanchappa gold in the Commonwealth shootings

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்றுள்ளார்.

இறுதிச் சுற்றில் அவர் 222.4 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதே பிரிவில் போட்டியிட்ட இதர இந்தியாவின் அமன்பிரீத் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். ஜிது ராய் வெண்கல பதக்கம் வென்றனர்

அதேபோன்று ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் பிரோன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சுரேஷ் குசாலே 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.