India need to play in the Adelaide Daybreak Test - Australia wish

இந்தியா அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் சர்வதேச போட்டிகள் அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் சதர்லேண்ட் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியது: "பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டித் தொடரில் 4 டெஸ்ட்கள் இடம் பெறுகின்றன. 

இதில் அடிலெய்டில் வரும் டிசம்பர் 6 முதல் 10-ஆம் தேதி வரை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பிசிசிஐ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பகலிரவு போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துளளோம்.

இந்தியா அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்டில் விளையாட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதற்காக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார். 

இதுவரை இந்தியா பகலிரவு டெஸ்ட்டில் பங்கேற்றதில்லை. அடிலெய்டில் ஏற்கெனவே நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.