நீரஜ் சோப்ராவின் வெறித்தனமான பயிற்சி..! வைரல் வீடியோ
காயத்தால் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மிகக்கடுமையாக பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தொடர்ந்து பதக்கங்களை வென்று கொடுத்து தேசத்திற்கு பெருமை சேர்த்துவருபவர் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் 88.13மீ தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவிற்கு வெள்ளி வென்று கொடுத்தார்.
இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்த தென்னாப்பிரிக்கா! பரிதாப இங்கிலாந்து
உலக தடகள சாம்பியன்ஷிப்பின்போது 90மீ தூரம் என்ற மைல்கல்லை எட்டுவதே இப்போதைய லட்சியம் என குறிப்பிட்ட நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அதை எட்டவில்லை. எனவே காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 90மீ தூரம் ஈட்டி எறிவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உலக தடகள சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் இந்தியா 61 பதக்கங்களை வென்றது. நீரஜ் சோப்ரா கலந்துகொண்டிருந்தால், அவரும் ஒரு தங்கம் வென்றிருப்பார். அவரது லட்சியமான 90மீ தூரத்தையும் எட்டியிருப்பார். ஆனால் காயம் காரணமாக அவர் காமன்வெல்த்தில் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிங்க - கங்குலியின் விலா எலும்பை உடைக்க சொல்லி டீம் மீட்டிங்கில் சொன்னாங்க.. நானும் உடைத்தேன் - அக்தர் ஃப்ளாஷ்பேக்
இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட நீரஜ் சோப்ரா அடுத்ததாக சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள டைமண்ட் லீக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தீவிரமாக பயிற்சி செய்துவருகிறார். ஈட்டி எறிதல் வீரர்களுக்கு தோள்பட்டை வலுவாக இருப்பது அவசியம். அந்தவகையில், தோள்பட்டையை வலுப்படுத்த அவர் தினசரி செய்யும் பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.